மே 13-ல் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' ஓடிடியில் வெளியீடு


மே 13-ல் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' ஓடிடியில் வெளியீடு

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், வரும் மே 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த படம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆகியோர், தவறாக வழி நடத்துவதாக பிரதமருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படம் வருகின்ற மே-13ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தை காணலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x