இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
ஏப்ரல் 8-ம் தேதியான நாளை பல்வேறு மொழிப்படங்கள் திரையரங்குளிலும், ஓடிடியிலும் வெளியாக உள்ளன. ஓடிடியை எடுத்துக்கொண்டால், விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
அடுத்து, அபிஷேக் பச்சன் நடித்த இந்தி திரைப்படமான 'தாஸ்வீ' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது.
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் டி.பி.வெயிஸ் எழுத்தில் உருவான 'மெட்டல் லார்டு' திரைப்படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கும்.
இவை தவிர, 'தி இன் பெட்வீன்' (நெட்ஃபிளிக்ஸ்), ஆல் தி ஓல்டு நைவ்ஸ் (அமேசான் ப்ரைம்), கொரியன் படமான 'யாக்ஷா ரூத்லெஸ் ஆப்ரேஷன்' படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் நாளை வெளியாகிறது.
திரையரங்குகளைப் பொறுத்தவரையில், தெலுங்கில் உருவான 'கஹானி', ஆங்கிலத் திரைப்படங்களான 'தி லாஸ்ட் சிட்டி', 'தி கான்ட்ராக்டர்', 'பேன்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரேட் ஆஃப் டம்பிள்டோர்' (Fantastic Beasts: The Secrets of Dumbledore) உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
இவை தவிர, ஓடிடியில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன்நெக்ஸ்ட் தளத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளது. தவிர, 'நார்தன்' மலையாளப் படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகிறது. ஹாட்ஸ்டாரில், 'தி கிங்க் மேன்' படமும், 'ஸ்டாண்ட் அப் ராகுல்' தெலுங்கு படம் ஆஹா தளத்திலும் வெளியாகிறது. 'எக் லவ் யா' கன்னடப் படத்தை நாளை முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
அதேபோல, 'அபே' வெப்சீரிஸின் 3-வது சீஸன் ஜி5 தளத்திலும், 'மை லிப்ரேஷன் நோட்ஸ்' 'அவர் ப்ளூஸ்' ஆகிய கொரியன் வெப் சீரிஸ்கள் நாளை மறுநாள் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
WRITE A COMMENT