டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை சிலம்பரசன் தொகுத்து வழங்கவுள்ளார்.
தற்போது பிரத்யேகமாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் 'பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, ஜுலி, தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப் உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியையும் வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.
சமீபத்தில் ‘விக்ரம்’ படப்பிடிப்புக்காக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்தனர்.
இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக ப்ரோமோ விடியோவையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டது.
#STRtheHostOfBBUltimate pic.twitter.com/GWozob5Kwu
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 24, 2022
WRITE A COMMENT