உறுதியானது ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4’ - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு


உறுதியானது ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4’ - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ நான்காவது சீசனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

2016ஆம் ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’. அந்த ஆண்டுக்கான எம்மி, கோல்டன் குளோப், கிராமி, பாஃப்டா, உள்ளிட்ட பல்வேறு விருதுகளில் சுமார் 175 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு மொத்தம் 65 விருதுகளை குவித்தது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றான இது இதுவரை மூன்று சீசன்களாக வெளியாகியுள்ளது. ஃபின் வொல்ஃப்ஹார்ட், மில்லி பாபி பிரவுன், நோவா ஷ்னாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை தி டஃப்பர் பிரதர்ஸ் உருவாக்கியுள்ளனர்.

இத்தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இதன் முடிவில் அடுத்த சீசனுக்கான ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ நான்காவது சீசன் பற்றி நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ ரசிகர்களை வருத்தமடைய செய்தது.

இந்நிலையில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ நான்காவது சீசனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரின் கடைசி சீசன் இதுதான் என்றும், இந்த சீசன் ‘மனி ஹெய்ஸ்ட்’ பாணியில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இத்தொடர் வரும் மே 27 அன்று ஒரு பாகமாகவும், ஜூலை 1 அன்று அடுத்த பாகமாகவும் வெளியாகவுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x