நெட்ஃப்ளிக்ஸில் இருந்து வெளியேறும் மார்வெல் தொடர்கள்


நெட்ஃப்ளிக்ஸில் இருந்து வெளியேறும் மார்வெல் தொடர்கள்

மார்வெல் நிறுவனத்தின் பல்வேறு தொடர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து வெளியேறுகின்றன.

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மார்வெல் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயரில் பல்வேறு சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்’, ‘அயர்ன்மேன்’, ‘எக்ஸ்-மென்’ உள்ளிட்ட மார்வெல் சூப்பர்ஹீரோ படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. சோனி நிறுவனத்துடன் இணைந்து மார்வெல் தயாரித்த ‘ஸ்பைடர்மேன்’ பட வரிசைகள் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளன.

திரைப்படங்கள் தவிர்த்து பல்வேறு வெப் தொடர்களையும் மார்வெல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்தொடர்களில் ‘டேர்டெவில்’, ‘லோகி’, ‘வாண்டாவிஷன்’ உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை. இதில் ‘லோகி’, ‘வாண்டாவிஷன்’, ‘கேப்டன் அமெரிக்கா அண்ட் தி விண்டர் சோல்ஜர்’ உள்ளிட்ட தொடர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகின. டிஸ்னி நிறுவனத்தின் அனைத்து தொடர்கள் மற்றும் திரைப்படங்களும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்திலேயே வெளியாகி வருகின்றன.

ஆனால் டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் தளத்தை வாங்குவதற்கு முன்பாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தான் மார்வெல் தொடர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மார்வெல் தொடர்களின் ஒப்பந்தம் முடிவடைவதால் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்வெல் நிறுவனத்தின் ‘டேர்டெவில்’, ‘ஜெஸ்ஸிகா ஜோன்ஸ்’, ‘ல்யூக் கேஜ்’, ‘அயர்ன் ஃபிஸ்ட்’, ‘தி டிஃபெண்டர்ஸ்’, ‘தி பனிஷர்’ உள்ளிட்ட தொடர்கள் ஹாட்ஸ்டார் தளத்துக்குச் செல்கின்றன.

FOLLOW US

WRITE A COMMENT

x