விக்ரம் நடிக்கும் 'மகான்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர்.
கடந்த சில தினங்களாகவே இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் படக்குழு இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது.
இந்நிலையில் மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்.10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#MahaanOnPrime from Feb10th !!#Mahaan #ChiyaanVikram #DhruvVikram @SimranbaggaOffc @actorsimha @Music_Santhosh @kshreyaas @vivekharshan #TSantanam #Kumar @sherif_choreo @DineshSubbaray1 @kunal_rajan @tuneyjohn @Stylist_Praveen @valentino_suren @7screenstudio @PrimeVideoIN pic.twitter.com/yj6DGhjr4A
— karthik subbaraj (@karthiksubbaraj) January 24, 2022
WRITE A COMMENT