வெப் சீரிஸில் கால் பதிக்கும் துல்கர் சல்மான்


வெப் சீரிஸில் கால் பதிக்கும் துல்கர் சல்மான்

‘தி ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் சீசனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவே இரண்டாவது சீசனையும் இயக்கியிருந்தனர். இத்தொடரில் ஈழத்தமிழர்கள் குறித்து தவறாக காட்டியதாக கடும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில், ராஜ்குமார் ராவ், துல்கர் சல்மான், ஆதர்ஷ் கவுரவ் நடிக்கும் புதிய வெப் சிரீஸ் ஒன்றை ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தொடரின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்தி வரும் மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x