‘ஆர்யா 2’ வெப் சீரிஸுக்காக சுஷ்மிதா சென்னுக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச உழைக்கும் பெண்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘ஆர்யா’. இதில் சுஷ்மிதா சென் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராம் மத்வானி, சந்தீப் மோடி, வினோத் ராவத் உள்ளிட்டோர் இயக்கிய இந்த வெப் சீரிஸ் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த டிசம்பர் மாதம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்று வரும் டிசி தெற்காசிய திரைப்பட விழாவில் ‘ஆர்யா’ இரண்டாவது சீசனுக்காக நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச உழைக்கும் பெண்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுஷ்மிதா சென் கூறும்போது, "ஆர்யா 2 சீரிஸ் மீது நீங்கள் பொழியும் அன்பும் பாராட்டுகளும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. அனைவராலும் விரும்பப்படும் இத்தொடருக்காக ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளது. தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிப்பிற்கான சர்வதேச உழைக்கும் பெண்கள் விருதை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் இந்த கௌரவத்தை வழங்கிய டிசி தெற்காசிய திரைப்பட விழாவின் அமைப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
WRITE A COMMENT