ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'இடியட்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ராம்பாலா. சந்தானத்தை நாயகனாக வைத்து 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இடியட்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ரவிமரியா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WRITE A COMMENT