தனுஷின் 'அத்ரங்கி ரே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு


தனுஷின் 'அத்ரங்கி ரே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அத்ரங்கி ரே' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டு உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (நவ.24) வெளியாகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x