‘மனி ஹெய்ஸ்ட்’ வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்


‘மனி ஹெய்ஸ்ட்’ வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்

‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் வெளியீட்டை முன்னிட்டுத் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது ராஜஸ்தானில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனம்.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பானிஷ் தொடர் ‘மனி ஹெய்ஸ்ட்’. வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்தொடரின் நான்காவது சீஸன் இந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்தது.

நெட்ஃப்ளிக்ஸில் அதிக முறை பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்களில் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரும் ஒன்று. இத்தொடரின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான ப்ரொஃபஸருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இத்தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி சீசன் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் இப்போதே ‘மனி ஹெய்ஸ்ட்’ குறித்த ஹேஷ்டேகுகளை ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வெர்வ்லாஜிக் என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக செப்டம்பர் 3 அன்று ‘மனி ஹெய்ஸ்ட்’ வெளியீட்டை முன்னிட்டு ‘நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்’ என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. பலரும் பொய்க் காரணங்கள் கூறி அன்று விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கவே விடுமுறை அளித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெர்வ்லாஜிக் நிறுவனத்தின் இந்த அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x