'டக் ஜெகதீஷ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு


'டக் ஜெகதீஷ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஹைதராபாத்:

‘டக் ஜெகதீஷ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா நிர்வானா இயக்கத்தில் நானி, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக் ஜெகதீஷ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தப் படம் ஓடிடியில் வெளியாவது உறுதியானது. இது தொடர்பாகப் படக்குழுவினருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு பின்பு சுமுகமாக முடிந்தது. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.

தற்போது செப்டம்பர் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'டக் ஜெகதீஷ்' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் வெளியீடு தொடர்பான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா முதல் அலையின்போது நானி நடிப்பில் உருவான 'வி' படமும் ஓடிடியில் வெளியானது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x