Last Updated : 19 Dec, 2024 05:48 PM

 

Published : 19 Dec 2024 05:48 PM
Last Updated : 19 Dec 2024 05:48 PM

‘விடுதலை 2’ முதல் ‘நிறங்கள் மூன்று’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

சென்னை: இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஷிக் அபு இயக்கத்தில் விஜயராகவன் நடித்துள்ள ‘ரைஃபில் க்ளப்’ மலையாள படம் இன்று (டிச.19) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ‘ED’, உன்னி முகுந்த் நடித்துள்ள ‘marco’ ஆகிய மலையாள படங்களை நாளை திரையரங்குகளில் பார்க்க முடியும். உபேந்திராவின் ‘UI’ கன்னட படம் நாளை வெளியாகிறது. ஹாலிவுட் படமான ‘Mufasa: The Lion King’ படத்தை நாளை பார்க்கலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: கனி குஸ்ருதி நடித்துள்ள ‘Girls Will Be Girls’ இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. டைலர் பெர்ரி இயக்கியுள்ள ‘Six Triple Eight’ படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. சுராஜ் வெஞ்சரமூடு நடிதுள்ள ‘முரா’ மலையாள படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சத்யா தேவ் நடித்துள்ள ‘ஜிப்ரா’ தெலுங்கு படம் ஆஹாவில் நாளை வெளியிடப்பட உள்ளது. ‘Twisters’ ஹாலிவுட் படம் ஜியோ சினிமாவில் தற்போது காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x