‘புஷ்பா 2’ முதல் ‘அமரன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?


‘புஷ்பா 2’ முதல் ‘அமரன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

சென்னை: திரையரங்குகள், நேரடி ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ தெலுங்கு திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. செல்வகுமார் இயக்கியிருக்கும் ‘ஃபேமிலி படம்’ வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ராகுல் தோலக்யா இயக்கியுள்ள ‘அக்னி’ (agni) இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இஸ்ரேலிய படத்தின் ரீமேக்கான ‘லாங்கிங்’ (longing) ஜியோ சினிமாவில் சனிக்கிழமை வெளியாகிறது.

திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘சார்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ (matka) தெலுங்கு படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது காண முடியும். ஆலியா பட்டின் ‘ஜிக்ரா’ இந்திப் படம் வெள்ளிக்கிழமை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தொடர்: சுதீர் மிஷ்ரா இயக்கியுள்ள ‘tanaav’ இந்தி இணையத் தொடரின் இரண்டாவது சீசன் சோனி லிவ் ஓடிடியில் நாளை (டிச.5) வெளியாகிறது. மகளுக்காக நியாயம் கேட்கும் தாயின் போராட்டத்தை விவரிக்கும் ‘Maeri’ வெப்சீரிஸை ஜீ5 ஓடிடியில் நாளை (டிச.5) காண முடியும்.

FOLLOW US

WRITE A COMMENT

x