வெப் சீரிஸில் நிவின் பாலி அறிமுகம் - ‘ஃபார்மா’ முதல் தோற்றம் எப்படி?


வெப் சீரிஸில் நிவின் பாலி அறிமுகம் - ‘ஃபார்மா’ முதல் தோற்றம் எப்படி?

சென்னை: நடிகர் நிவின் பாலி நடிக்கும் இணையத்தொடரான ‘ஃபார்மா’ (pharma) தொடரின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிவின் பாலி வெப் சீரிஸில் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இந்த தொடர் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நிவின் பாலி தற்போது இணையத் தொடரிலும் அறிமுகமாகிறார். இந்தத் தொடரில் அவர் சேல்ஸ்மேனாக நடித்துள்ளார். ‘பார்மா’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த தொடர் மெடிக்கல் - ட்ராமாவாக உருவாகியுள்ளது. கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த தொடர் திரையிடப்பட்டுள்ளது.

பி.அருண் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தேசிய விருது பெற்ற இந்தி நடிகர் ரஞ்சித் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ராமசந்திரன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடரின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. முதல் தோற்றத்தை பொறுத்தவரை நிவின் பாலியும், ரஞ்சித் கபூரும் நின்றுகொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிவின் பாலி நடிப்பில் அடுத்ததாக ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

FOLLOW US

WRITE A COMMENT

x