‘சொர்க்கவாசல்’ முதல் ‘லக்கி பாஸ்கர்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?


‘சொர்க்கவாசல்’ முதல் ‘லக்கி பாஸ்கர்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

சென்னை: திரையரங்குகள் மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. டேவிட் டெட்ரிக் இயக்கியுள்ள ‘மோனா 2’ (moana 2) ஹாலிவுட் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா, அவினாஷ் திவாரி நடித்துள்ள ‘சிக்கந்தர் கா முகத்தார்’ (Sikandar Ka Muqaddar) இந்தி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்தியில் வெளியான ‘lust stories’ ஆந்தாலஜியின் தமிழ் ரீமேக்கான ‘Sshhh’ ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. லிஜின் ஜோஸ் இயக்கத்தில் ஊர்வசி, பார்வதி, லிஜோ மோல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘Her’ மலையாளப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸில் தற்போது காணலாம். பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது. விக்ராந்த், ரித்விகாவின் ‘தீபாவளி போனஸ்’ ஆஹா ஓடிடியில் உள்ளது.

இணையத் தொடர்: கிஷோர் நடித்துள்ள ‘பாராஷூட்’ (Parachute) தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x