சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் நாளை (நவ.29) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வரும் நவம்பர் 29-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT