கல்யாண கேசட்டை எல்லாம் போடுவீங்களா ஆபீசர்..? - நெட்ஃப்ளிக்ஸும் நெட்டிசன்களும்


கல்யாண கேசட்டை எல்லாம் போடுவீங்களா ஆபீசர்..? - நெட்ஃப்ளிக்ஸும் நெட்டிசன்களும்

பிரபலங்களின் திருமண வீடியோக்களைக் கண்டு ரசிப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே விருப்பம் உண்டு. எண்பதுகளின் திரைநட்சத்திரங்களின் திருமண நிகழ்வுகளின் காணொலி துணுக்குகள் இன்றும் சமூகவலைதளங்களில் டிரெண்டாவது இதற்கு உதாரணம். 2022-ல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் சந்தாதாரர்கள் குறையத் தொடங்கியபோது, பெரிய மெனக்கிடல்கள் இல்லாமல் எல்லோரும் பார்க்கும் வகையிலான ஆவணப் படங்களாகப் பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை அந்நிறுவனம் பதிவேற்றிப் பணம் பார்த்தது.

அப்படித்தான், சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வைபவம் அடங்கிய வாழ்க்கை வரலாறு நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப் படமாக வெளியானது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதை வைத்தே படம் வைரலாகும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.

இந்நிலையில், டிசம்பர் 4-ல் நடக்கவிருக்கும் நடிகர் நாகசைதன்யா - நடிகை ஷோபிதா துலிபாலா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியிருக்கிறது. இதையடுத்து, ‘கன்டென்ட் போரடித்தால் கல்யாண கேசட்டையெல்லாம் போடுவீங்களா ஆபீசர்’ என்கிற ரீதியில் கலாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்! - சானா

FOLLOW US

WRITE A COMMENT

x