சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. இதன் விளைவாக ரூ.70 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்தது. இந்நிலையில் ‘லக்கி பாஸ்கர்’ வரும் நவம்பர் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT