‘கங்குவா’ முதல் ‘கிஷ்கிந்தா காண்டம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?


‘கங்குவா’ முதல் ‘கிஷ்கிந்தா காண்டம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

சென்னை: திரையரங்குகள் மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று (நவ.14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ தெலுங்கு திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜுன் அசோகனின் ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ மலையாள படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம். விக்கி கவுசலின் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ இந்திப் படம் நாளை வெளியாகிறது. ரிட்லி ஸ்காட்டின் ‘க்ளாடியேட்டர் 2’ ஹாலிவுட் படம் வெள்ளியன்று வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஹக் ஜாக்மேன் நடித்துள்ள ‘டெட்பூல் & வால்வரின்’ ஹாலிவுட் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. சுதீர் பாபு, சாயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘மா நானா சூப்பர் ஹீரோ’ தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆசிஃப் அலியின் ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை நவம்பர் 19-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க முடியும். இணையத் தொடர்: சுதந்திர போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘ப்ரீடம் அட் மிட் நைட்’ (Freedom at Midnight) பாலிவுட் வெப் சீரிஸ் வெள்ளிக்கிழமை சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x