சென்னை: கிஷோர் நடித்துள்ள ‘பாராசூட்’ இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் ‘பாராசூட்’. 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி. கிருஷ்ணா குலசேகரன், காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் கதையை ஸ்ரீவருண் எழுதியுள்ளார்.
தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை பொறுத்தவரை இரண்டு குழந்தைகள் இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் காணாமல் போக அவரது தாய் பதறுகிறார். அடுத்து என்ன என்பதுடன் டீசர் முடிகிறது. இந்த வெப்சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
WRITE A COMMENT