சென்னை: ஆசிஃப் அலி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற மலையாள படமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைப்படம் வரும் நவம்பர் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆசிஃப் அலி நடிப்பில் வெளியான ‘கக்ஷி அம்மினிபிள்ளா’ படத்தை இயக்கியவர் திஞ்சித் அய்யாத்தான். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஆசிஃப் அலியை வைத்து இயக்கியுள்ள படம் ‘கிஷ்கிந்தா காண்டம்’. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, ஜெகதீஷ்,நிழல்கள் ரவி, விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். படம் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
படத்தின் பட்ஜெட் ரூ.10 கோடி என கூறப்படுகிறது. தந்தையும் மகனும் வாழ்ந்து வரும் வீட்டில், மகனின் இரண்டாவது மனைவியாக பெண் ஒருவர் வரும்போது நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மையக்கதை. மனித உணர்வுகளை ஆழமாக பேசிய இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் வரும் நவம்பர் 19-ம் தேதி டிஸ்னி ப்ள்ஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT