இந்த வாரம் திரையரங்குகள், திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: ‘பிரேமலு’ பட இயக்குநர் கிரிஷ் இயக்கியுள்ள ‘ஐ எம் காதலன்’ மலையாளப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘முரா’, ஷைன் டாம் சாக்கோவின் ‘ஒரு அன்வேஷனதின்டே தொடக்கம்’ ஆகிய மலையாளப் படங்களை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காண முடியும். தமிழ் படங்கள் எதுவும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
நேரடி ஓடிடி ரிலீஸ்: அனுபம் கெர் நடித்துள்ள ‘விஜய் 69’ இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நாளை காண முடியும். திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தை நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம். ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியிடப்பட உள்ளது. டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ ஹாட்ஸ்டாரில் வெள்ளிக்கிழமை வெளியாகும்.
சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. கரீனா கபூரின் ‘தி பக்கிங்காம் மர்டர்ஸ்’ (The Buckingham Murders) இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காண முடியும். இணையத் தொடர்: சமந்தா நடித்துள்ள ‘சிட்டாடல் ஹனி பனி’ (Citadel: Honey Bunny) இணையத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT