இந்த வாரம் திரையரங்குகள், திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவினின் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன. துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஶ்ரீ முரளி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள ‘பகீரா’ கன்னட திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ‘கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது. விதார்த், வாணி போஜன் நடித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஆசிஃப் அலியின் ‘கிஷ்கிந்த காண்டம்’ மலையாளப் படத்தை நவம்பர் 1-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க முடியும். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை (அக்.31) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
WRITE A COMMENT