‘தீபாவளி போனஸ்’ முதல் ‘மெய்யழகன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘தீபாவளி போனஸ்’ முதல் ‘மெய்யழகன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: விக்ராந்த், ரித்விகா நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ மற்றும் புதியவன் ராசையா இயக்கியுள்ள ‘ஒற்றை பனைமரம்’ ஆகிய படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ வெள்ளிக்கிழமை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலக போர்’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது. சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத் தொடர்: சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘ஐந்தாம் வேதம்’ இணையத் தொடர் ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x