புது டெல்லி: அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025-ம் ஆண்டிலிருந்து அழுத்தமான கன்டென்டுகளில் முதலீடுகளை தொடரவும், மேலும் அதனை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதனடிப்படையில் இந்தியாவில் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் அடுத்த ஆண்டு முதல் தாங்கள் காணும் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் விளம்பரங்கள் இடம்பெறும். பிற ஸ்ட்ரீமிங் தளங்களைக் காட்டிலும் குறைவான விளம்பரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “விளம்பரங்கள் வேண்டாம் என நினைப்பவர்கள் ‘அட் ஃப்ரீ’ (ad free) கட்டண திட்டத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம்” என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ப்ரைம் சந்தாதாரர்களுக்கு முன்கூட்டியே மெயில் அனுப்பப்படும். அதன் மூலம் அவர்கள் தங்களுக்கு விளம்பரங்களுடன் கூடிய மெம்பர் ஷிப் வேண்டுமா அல்லது அட் ஃப்ரீ மெம்பர்ஷிப் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT