இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’, சசிகுமாரின் ‘நந்தன்’, சீனுராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலக போர்’, சத்யராஜின் ‘தோழர் சேகுவேரா’, காளிவெங்கட்டின் ‘தோனிமா’ ஆகிய தமிழ் படங்களை இன்று திரையரங்குகளில் காணலாம். சித்தார்த் சதுர்வேதியின் ‘யுத்ரா’ இந்திப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘நேவர் லெட் கோ’ (never let go), ‘டிரான்ஸ்பார்மர் ஒன்’ ஆகிய ஹாலிவுட் படங்களை திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: பரேஷ் ராவலின் ‘ஜோ தேரா ஹை ஓ மேரா ஹை’ (jo tera hai woh mera hai) இந்திப் படம் ஜியோ சினிமா ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சூரியின் ‘கொட்டுக்காளி’ சிம்ப்ளி சவுத் ஓடிடியில் செப்.27-ல் வெளியாகிறது. அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் 27-ம் தேதி காணலாம். பால சரவணன் நடித்துள்ள ‘பேச்சி’ படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம். ரம்யா, ராவ் ரமேஷின் ‘மாருதி நகர் சுப்ரமணியம்’ தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் உள்ளது.
இணையத் தொடர்: பஞ்சாயத் வெப்சீரிஸின் தமிழ் ரீமேக்கான ‘தலைவெட்டியான் பாளையம்’ அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
WRITE A COMMENT