தலைவெட்டியான் பாளையம் ட்ரெய்லர் எப்படி? - நகைச்சுவைக்கான முயற்சி!


தலைவெட்டியான் பாளையம் ட்ரெய்லர் எப்படி? - நகைச்சுவைக்கான முயற்சி!

சென்னை: இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ‘பஞ்சாயத்’ வெப்சீரிஸ் தமிழ் ரீமேக்கான ‘தலைவெட்டியான் பாளையம்’ தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: தலைவெட்டியான் பாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக பணிக்கு சேர்கிறார் சித்தார்த். கிராமத்தின் நடவடிக்கைகள் அவருக்கு புதிதாக இருக்க மாட்டிக் கொண்டு முழிக்கிறார். கிராம பஞ்சாயத்து சேர்மனாக தேவதர்ஷினியும், அவரது கணவர் சேத்தன் கிராமத்து மனிதர்களின் சாயலில் கவனம் ஈர்க்கின்றனர். எல்லாமே புதிதாகவும், பிடிக்காத வகையிலும் இருக்க வேலையை விட பார்க்கிறார் சித்தார்த். பின்னணியில் ஷான் ரோல்டனின் இசை அவரது துயரத்தை இசையாக கடத்துகிறது.

மொத்த ட்ரெய்லரை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையான சீரிஸை கொடுக்க படக்குழு நினைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தெரிகிறது. ஆனால் ட்ரெய்லரில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்றாலும், வெப்சீரிஸில் சாத்தியங்கள் இருக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‘பஞ்சாயத்’ இந்தி சீரிஸ் ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் பெரிய அளவில் ஈர்ப்பு கொடுக்குமா என்பது சந்தேகம்.

தலைவெட்டியான் பாளையம்: மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கியுள்ள இந்தத் தொடரை தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்துள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

WRITE A COMMENT

x