‘ஏஆர்எம்’ முதல் ‘ரகு தாத்தா’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘ஏஆர்எம்’ முதல் ‘ரகு தாத்தா’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள படமான ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ARM) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆசிஃப் அலியின் ‘கிஷ்கிந்த காண்டம்’ மலையாளப் படத்தை திரையரங்குகளில் காணலாம். ஜாக்கி ஷெராஃப், பிரியாமணி நடித்துள்ள ‘கோடேஷன் கேங்க்’ தமிழ் படம் வெளியாகியுள்ளது. ரகுமான் நடித்துள்ள ‘பேட் பாய்ஸ்’ மலையாளப் படத்தை தியேட்டரில் காண முடியும். கரீனா கபூரின் ‘தி பக்கிங்ஹாம் மர்டர்’ இந்திப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ராகுல் போஸ் நடித்துள்ள ‘பெர்லின்’ இந்திப் படம் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. விக்ராந்த் மெஸ்ஸி நடித்துள்ள ‘செக்டார் 36’ இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஆசிஃப் அலி, பிஜுமேனனின் ‘தலவன்’ சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ரவி தேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம். கீர்த்தி சுரேஷின் ‘ரகுதாத்தா’ ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. அறிமுக நடிகர்களின் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் ஆஹாவில் உள்ளது. பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

இணையத் தொடர்: விஜய் மில்டனின் ‘கோலி சோடா ரைசிங்’ வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x