இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நிவேதா தாமஸின் ‘35 சின்ன கத காடு’ தெலுங்கு படம் திரையரங்குகளில் காணக்கிடைக்கிறது. ஹாலிவுட் படமான ‘ஸ்ட்ரேஞ் திங்’ (strange darling) படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ரிதேஷ் தேஷ்முக்கின் ‘விஸ்ஃபோட்’ இந்திப் படம் ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகியுள்ளது. ‘ரெபல் ரிட்ஜ்’ (Rebel Ridge) ஹாலிவுட் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: ரியான் கோஸ்லிங்கின் ‘தி ஃபால் காய்’ ஹாலிவுட் படத்தை ஜியோ சினிமாவில் காண முடியும். ஆக்ஷன் படமான ‘கில்’ இந்திப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நகுலின் ‘வாஸ்கோடகாமா’ ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ஆசிஃப் அலியின் ‘அடியோஸ் அமிகோ’ (Adios Amigo) மலையாளப் படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. ராம் பொத்தினேனியின் ‘டபுள் ஐ ஸ்மார்ட்’ தெலுங்கு படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும்.
இணையத் தொடர்: ஹாலிவுட் வெப்சீரிஸான ‘இங்கிலீஷ் டீச்சர்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
WRITE A COMMENT