விஜய் மில்டனின் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி? - கவனம் ஈர்க்கும் நடிகர் பட்டாளம்


விஜய் மில்டனின் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி? - கவனம் ஈர்க்கும் நடிகர் பட்டாளம்

சென்னை: விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா ரைசிங்’ இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ‘கோலி சோடா’ சீரிஸின் தொடர்ச்சியாக இந்த தொடர் இருக்கும் என தெரிகிறது. அதன்படி “மார்கெட்டுல நமக்குன்னு ஒரு கடை இருந்தா நல்லாருக்கும்ல” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் நண்பர்கள் இணைந்து உணவகம் ஒன்றை நடத்துகின்றனர். அடுத்தடுத்து காட்சிகள் ரவுடிசம் பக்கம் நகர்கிறது. அந்த உணவகத்துக்கு ஏற்படும் இடையூறுகள் தான் கதையாக இருக்கும் என தெரிகிறது.

நடுவில் சேரன் தாடியுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ ஆக ஷாம் மிரட்டுகிறார். எல்லாவற்றையும் தாண்டி பக்கா ரவுடியாக நடிகர் புகழின் தோற்றம் கவனம் ஈர்க்கிறது. ரம்யா நம்பீசன், அபிராமி மற்றும் முந்தைய ‘கோலி சோடா’ படத்தில் இருந்த சிறுவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடர் செப்டம்பர் 13-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலி சோடா ரைசிங்: விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ல் வெளியானது ‘கோலி சோடா’ திரைப்படம். 2018-ல் ‘கோலி சோடா 2’ வெளியானது. இதன் தொடர்ச்சியாக தற்போது இதை வரிசையில் ‘கோலி சோடா ரைசிங்’ என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார் விஜய் மில்டன். இதில், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, அம்மு அபிராமி நடித்துள்ளனர். அருங்கிரி இசையமைத்துள்ளார். சைமன் கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்.13 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

WRITE A COMMENT

x