சென்னை: இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பஞ்சாயத்’ வெப் தொடரின் தமிழ் ரீமேக்கான ‘தலைவெட்டியான் பாளையம்’ செப்டம்பர் 20-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கியுள்ள இந்தத் தொடரை தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்துள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.
தனது சொந்த ஊரிலிருந்து வந்து தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் பணிக்கு சேர்கிறார் (அபிஷேக் குமார்). அந்த கிராமவாசிகளுக்கும், சித்தார்த்துக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்தத் தொடர். இது இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பஞ்சாயத்’ தொடரின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome to Thalaivettiyaan Paalayam! A village where every day brings new twists and turns. Are you ready for the journey?#ThalaivettiyaanPaalayamOnPrime, New Series, Sept 20@TheViralFever @PrimeVideoIN @ArunabhKumar @StephenPoppins #Naga @Blahktweets @vijaykoshy… pic.twitter.com/fRlbiDk3n6
— prime video IN (@PrimeVideoIN) September 5, 2024
WRITE A COMMENT