‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ வெப் தொடர் சர்ச்சை - நெட்ஃப்ளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன் 


‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ வெப் தொடர் சர்ச்சை - நெட்ஃப்ளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன் 

புதுடெல்லி: ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ தொடரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர்களை வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள தொடர் ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’. 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியானது.

இத்தொடரில் விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. உண்மையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத் - உல்- முஜாஹிதீனைச் சேர்ந்தவர்ர்களாக கடத்தப்பட்டிருந்தது. அப்படி இருக்கும்போது ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ வெப் தொடரில் பயங்கரவாதிகளுக்கு ’போலா’ மற்றும் ‘சங்கர்’ என்று எப்படி பெயர் சூட்டலாம் என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் தலைவர் மோனிகா ஷெர்கில் இன்று (செப்.03) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இத்தொடரில் நடிகர்கள் விஜய் வர்மா, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், மனோஜ் பஹ்வா, அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்சா, பத்ரலேகா, அம்ரிதா புரி, திபியேந்து பட்டாச்சார்யா மற்றும் குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x