நெட்ஃப்ளிக்ஸில் 2024-ல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக ‘மகாராஜா’ சாதனை!


நெட்ஃப்ளிக்ஸில் 2024-ல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக ‘மகாராஜா’ சாதனை!

சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தாண்டில் இதுவரை அதிக வியூஸ்களை பெற்ற இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம். 18.6 மில்லியன் வியூஸ்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50-வது படமாக இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் ரூ.100 கோடியை வசூலித்தது. இதையடுத்து கடந்த ஜூலை 12-ம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

இதன் மூலம் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்த இப்படம் அதிக வியூஸ்களைப் பெற்றது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக பார்வைகளை ஈர்த்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது ‘மகாராஜா’. இந்தப் படம் 18.6 மில்லியன் வியூஸ்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. கரீனா கபூரின் ‘க்ரியூ’ 17.9 மில்லியன் வியூஸ்களையும், கிரண் ராவின் ‘லாபத்தா லேடீஸ்’ 17.1 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x