‘வாழை’ முதல் 'ராயன்' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘வாழை’ முதல் 'ராயன்' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’, மாரி செல்வராஜின், ‘வாழை’, விமலின் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’, ‘சாலா’, ‘அதர்ம கதைகள்’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன. மஞ்சுவாரியரின் ‘ஃபுட்டேஜ்’ (Footage), மீரா ஜாஸ்மினின் ‘பாலும் பழவும்’ (Palum Pazhavum), பாவனாவின் ‘ஹன்ட்’ (hunt) ஆகிய மலையாள படங்களை நாளை பார்க்கலாம். அத்துடன் ‘ப்ளிங் ட்வைஸ்’ (Blink Twice) ஹாலிவுட் படமும் நாளை வெளியாக உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: தந்தை மகன் பாசம் பேசும் ‘திக்டம்’ (Tikdam) இந்திப் படம் ஜியோ சினிமா ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. டேவ் செர்னின் இயக்கியுள்ள ‘இன்கம்மிங்’ (Incoming) ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது.

திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. தெருகூத்து கலைஞர்களின் வாழ்வை பேசும் ‘ஜமா’ அமேசான் ப்ரைமில் உள்ளது. குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள ‘க்ர்ர்’ (Grrr) மலையாள படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க முடியும்.

ஆவணத் தொடர்: பாலிவுட்டின் புகழ்பெற்ற கதாசிரியர்களான ஜாவேத் அக்தர், சலிம்கான் குறித்த ஆவணத் தொடரான ‘ஆங்ரி யங் மேன்’ (Angry Young Men) அமேசான் ப்ரைமில் உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x