சத்யராஜின் ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?  | காதல், காமெடி, சென்டிமென்ட்..!


சத்யராஜின் ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?  | காதல், காமெடி, சென்டிமென்ட்..!

சென்னை: சத்யராஜ் நடித்துள்ள ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தன் மனைவியிடம் நல்லவர் போன்ற பிம்பத்தை கட்டமைத்துக் கொள்கிறார் சத்யராஜ். ஆனால் அவர் அப்படியில்லை. எந்தப் பெண்ணையும் பார்க்காதவர் என்ற பிம்பம் ஒரு கட்டத்தில் உடைபடுகிறது. அதாவது சத்யராஜ் தனது முன்னாள் காதலியை கண்டடைகிறார். அதனை மனைவியிடம் சொல்லவும் செய்கிறார். “நமக்குள்ள இந்த மாதிரி ஒரு அழியாத கோலங்கள் இருக்குன்னு சொல்லியிருக்கலாம்” என்ற வசனம் கவனம் பெறுகிறது. தன் மகன் காதலிக்கும் பெண்ணின் தாய் ரேகா தான் சத்யராஜின் முன்னாள் காதலி. இப்படியான கதைக்களத்தில் நடக்கும் சென்டிமென்ட் கலந்த ஜாலியான ட்ராமா தான் இந்த வெப் சீரிஸ் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

‘ரெட்டச்சுழி’. ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்‌ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸுக்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

WRITE A COMMENT

x