சத்யராஜின் ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ வெப்சீரிஸ் முதல் தோற்றம் வெளியீடு 


சத்யராஜின் ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ வெப்சீரிஸ் முதல் தோற்றம் வெளியீடு 

சென்னை: சத்யராஜ் நடித்துள்ள ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ வெப்சீரிஸின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ரெட்டச்சுழி’. ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்‌ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸுக்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் தோற்றத்தை பொறுத்தவரை நடிகைகள் சீதா, ரேகா உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்க நடுவில் சத்யராஜ் நின்று கொண்டிருக்கிறார். இணையத் தொடரின் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x