சென்னை: திரையரங்குகளில் வெளியான நீளத்திலிருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ள ‘ரயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் கடந்த ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரயில்’. முன்னதாக இந்தப் படத்துக்கு ‘வடக்கன்’ என தலைப்பிடப்பட்டிருந்தது. சென்சார் போர்டு அனுமதி மறுத்த காரணத்தால் ‘ரயில்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. படத்தில் குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் படத்தை தயாரித்துள்ளார்.
எஸ்.ஜே.ஜனனி படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் வெளியான நீளத்தில் இருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு ஓடிடியில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Paarvaiaalargal gavanathirku Rail en 0208 Aug 2 naliravu aha viruku vandhayum... #Rail premiers from August 2 #ahatamil @vediyappan77 @bhaskarwriter @thenieswar @inagseditor @jananiysjj@Rajeshsaseendr1 pic.twitter.com/cuakSfDEmY
— aha Tamil (@ahatamil) July 31, 2024
WRITE A COMMENT