சென்னை: ஊர்வசி, பார்வதி இணைந்து நடித்துள்ள ‘உள்ளொழுக்கு’ மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. இதனை இயக்கிய கிறிஸ்டோ டோமியின் புதிய படம் ‘உள்ளொழுக்கு’. இதில் பார்வதி, ஊர்வசி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மாமியார் - மருமகள் இடையிலான உணர்வுச் சிக்கல்களையும், விருப்பமில்லா திருமண பந்ததில் உள்ள பிரச்சினைகளையும் அழுத்தமாக பேசியது இப்படம்.
இந்நிலையில் படம் தற்போது ‘சிம்பிளி சவுத்’ (Simply South) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை மலையாளத்தில் மட்டும் காண முடியும்.> விமர்சனத்தை வாசிக்க: ‘Ullozhukku’ திரை விமர்சனம்: ஊர்வசி - பார்வதியின் உணர்வுப் போராட்டம் எப்படி?
One of the finest Malayalam films of this year is finally here! #Ullozhukku is OUT NOW and streaming on Simply South worldwide, excluding India.
— Simply South (@SimplySouthApp) July 26, 2024
-@parvatweets | #Urvashi | @christotomy | @RonnieScrewvala | @HoneyTrehan | @RSVPMovies | @MacguffinP | @sanju4475 |… pic.twitter.com/Qw5YddDqVR
WRITE A COMMENT