சென்னை: சுராஜ் வெஞ்சரமுடு நடித்துள்ள ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ மலையாள வெப்சீரிஸ் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
இந்த இணையத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. காமெடி ட்ராமாவான இந்த வெப்சீரிஸில் நாகேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் நடித்துள்ளார். 5 மனைவிகளை திருமணம் செய்துகொள்ளும் அவர் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் இந்த வெப்சீரிஸ்.
சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன், ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜின் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸ், மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT