சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சட்னி சாம்பார்’ இணைய தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
ட்ரெய்லர் எப்படி?: அமுதா உணவகம் என்ற பெயரில் யோகிபாபு இட்லி கடை நடத்தி வருகிறார். வழக்கமான தனது உடல்மொழியில் கவனம் பெறுகிறார் யோகிபாபு. சில இடங்களில் சீரியஸாகவும் நடித்துள்ளார். மேலும் தொடரில் எமோஷனல் காட்சிகள் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாணி போஜன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் தொடரின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூலை 26-ம் தேதி இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர் வீடியோ:
WRITE A COMMENT