“வாழ்வில் எப்போதும் உயரத்திலேயே இருக்க முடியாது” - பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ கனெக்‌ஷன் 


“வாழ்வில் எப்போதும் உயரத்திலேயே இருக்க முடியாது” - பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ கனெக்‌ஷன் 

மும்பை: “ஒரு வலுவான கதாபாத்திரம் பலவீனமடைவதைதான் இந்த சீசனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதுதான் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்திலேயே இருக்க முடியாது. கீழேயும் வந்துதான் ஆக வேண்டும்” என ‘மிர்சாபூர் சீசன் 3’ யுடன் வாழ்க்கையை ஒப்பிட்டு பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார்.

அண்மையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவரிடம், “அரசியலுக்கு வருவீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த பங்கஜ் திரிபாதி, “இல்லை. என்னுடைய நடிப்பு தொழிலே சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது” என்றார். மேலும், ‘மிர்சாபூர் சீசன் 3’ குறித்து பேசிய அவர், “நான் இன்னும் சீசனை முழுமையாக பார்க்கவில்லை. என்னுடைய காட்சிகளை மட்டுமே பார்த்தேன். காலின் பையா எந்தவித வன்முறையையும் இந்த சீசனில் நிகழ்த்தவில்லை. அவரே அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

என்னுடைய பல நண்பர்கள் தொடரில் என்னை அதிகம் பார்க்க வேண்டும் என்று விரும்பியதாகவும், இறுதியில் அவர்கள் என்னைப் பார்த்தபோது, ‘காலின் பையா இஸ் பேக்’ என திருப்தி அடைந்ததாக கூறினார்கள். ஒரு வலுவான கதாபாத்திரம் பலவீனமடைவதை தான் இந்த சீசனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதுதான் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் உயரத்திலேயே இருக்க முடியாது. கீழேயும் வந்து தான் ஆக வேண்டும்” என்றார்.

பங்கஜ் திரிபாதி நடிப்பில் பரவலான வரவேற்பை பெற்ற தொடர் ‘மிர்சாபூர்’. இதன் மூன்றாவது சீசன் தற்போது அமேசான் ப்ரைம்ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. அடுத்து அவர் நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி ‘Stree 2’ பாலிவுட் திரைப்படம். | >விமர்சனத்தை வாசிக்க: Mirzapur season 3: அதிகாரமும் குற்றமும் பிணைந்த ரத்தச் சரித்திரம் எப்படி? | ஓடிடி திரை அலசல்

FOLLOW US

WRITE A COMMENT

x