பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ஜூலை 19-ல் ஓடிடியில் ரிலீஸ்!


பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ஜூலை 19-ல் ஓடிடியில் ரிலீஸ்!

கொச்சி: பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் வரும் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் ‘தி கோட் லைஃப்’. இப்படம் தமிழிலும் ‘ஆடுஜீவிதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை ப்ளஸ்ஸி இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சுனில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, ஒருவழியாக கடந்த மார்ச் மாதம் வெளியானது.

வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவன் பல்வேறு துயரங்களை அனுபவித்து பின்னர் அங்கிருந்து தப்பிக்கும் கதையை கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி 5 மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் வரும் ஜூலை 19-ம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x