சென்னை: ஸ்பானிஷ் படமான ‘தி ப்ளாட்ஃபார்ம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையிலான இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக அடுக்கில் நிகழும் உணவுப் போராட்டத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருந்து 2019-ல் வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான ‘தி பிளாட்ஃபார்ம்’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட உள்ளது. இதன் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - முந்தைய பாகத்தில் காணப்பட்ட அதே மாதிரியான சிறையுடன் கூடிய அடுக்குகள் இந்தப் பாகத்திலும் தொடர்கிறது. உணவுக்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை காட்சிகள் தெளிவுப்படுத்துகிறது. வகை வகையான உணவுகள் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலேடுக்குகளில் உள்ளவர்கள் உணவுக்காக ஏங்கி நிற்கின்றனர். இருள் சூழ்ந்த அந்த அடுக்குகளின் வழியே ஒருவித அச்ச உணர்வு குடிகொண்டிருக்கிறது. மேலும் ரத்தம், பேய், பிணங்கள் என ஆழமான டீசர் ஒருவித ஹாரர் உணர்வுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் வீடியோ:
WRITE A COMMENT