இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காண முடியும். பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்ஃபிரா’ (sarfira) (சூரரைப்போற்று ரீமேக்) இந்திப் படம் நாளை வெளியிடப்பட உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: சோனாக்ஷி சின்ஹா - ரித்தேஷ் தேஷ்முக்கின் ‘ககுடா’ (Kakuda) இந்திப் படம் ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை நேரடியாக வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தை நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காண முடியும். வெற்றியின் ‘பகலறியான்’ ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.
இணையத் தொடர்: இம்ரான் ஹாஷ்மியின் ‘ஷோ டைம்’ (show time) தொடரின் இரண்டாம் பாகம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
WRITE A COMMENT