சென்னை: நடிகை த்ரிஷா நடித்துள்ள ‘பிருந்தா’ வெப் சீரிஸின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது அவர் நடிக்கும் முதல் இணையத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை த்ரிஷாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘லியோ’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது முதல் முறையாக இணையத் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் சோனி லிவ் ஓடிடியில் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு வெப் சீரிஸான இதனை சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ளார். தெலுங்கு தவிர்த்து, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - பெண் குழந்தையை பலிகொடுக்கும் நிகழ்வுடன் தொடங்குகிறது டீசர். “நமக்குள் இருக்கும், கோபம், துரோகம், வெறுப்பு இவற்றுக்கு எதிரானது நம் யுத்தமல்ல. மாறாக நம்மிடம் இருக்கும் நன்மையான விஷயங்களை அழியாமல் பாதுக்கொள்வதே உண்மையான யுத்தம்” என்ற பின்னணி குரல் ஒலிக்க த்ரிஷா மாஸாக இன்ட்ரோ கொடுக்கிறார். அடுத்தடுத்து நகரும் காட்சிகள் வெப் சீரிஸ் மீதான நம்பிக்கையை கூட்டுகின்றன. ஆகஸ்ட் 2-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெப் சீரிஸ் வெளியாகிறது. டீசர் வீடியோ:
WRITE A COMMENT