மோகனின் ‘ஹரா’ ஜூலை 5-ல் ஓடிடியில் ரிலீஸ்!


மோகனின் ‘ஹரா’ ஜூலை 5-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: மோகன் நடித்துள்ள ‘ஹரா’ திரைப்படம் வரும் ஜூலை 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாதா 87’,‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள படம் ‘ஹரா’. இந்தப் படத்தின் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அனுமோல், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் மோகனுக்கு ‘கம்பேக்’ ஆக இருக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 5-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் நடிப்பில் அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x