நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டீகே இயக்கிய ‘தி பேமிலிமேன் 2’ மூலம், வெப் தொடரில் அறிமுகமானார். அதில் ஈழத்துப் பெண்ணாக நடித்திருந்தார். அவர் நடிப்பு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ள ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் வருண் தவணுடன் நடித்திருக்கிறார். விரைவில் இது வெளியாக இருக்கிறது.
இதையடுத்து சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார். ரக்தபீஜ் (Rakhtabeej) என்ற இந்த வெப் தொடரையும் ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இந்தி நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.
தற்போது ‘தி பேமிலிமேன் 3’ வெப் தொடரை இயக்கி வரும் ராஜ் மற்றும் டீகே அதை விரைவில் முடிக்க இருக்கின்றனர்.
WRITE A COMMENT