தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்று தினமும் ரூ.40,000 சம்பாதிக்கும் இளம்பெண்: பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்பு


தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்று தினமும் ரூ.40,000 சம்பாதிக்கும் இளம்பெண்: பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டி கடையின் மூலம் வடா பாவ் விற்பனை செய்யும் சந்திரிகா தீக்சித் ஒரு நாளைக்கு ரூ.40,000 வருமானம் ஈட்டுவது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, அவர் பிரபலங் கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபல மாகியுள்ளார்.

நன்கு படித்து நல்ல வேலை கிடைத்து பணியாற்றி வந்த சந்திரிகாவுக்கு சொந்தமாக தொழில்தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இதையடுத்து, அவர் தேர்வு செய்தது மக்களின் பசியை ஆற்றும் வடா பாவ் விற்பனையைத்தான்.

டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டியில் தயாரிக்கப்படும் வடா பாவ் சிற்றுண்டியை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். மகாராஷ்டிராவின் மிகச்சிறந்த தெருவோர உணவாக வடா பாவ் உள்ளது. இதனை சுவையாக தயார் செய்வதில் வல்லவரான சந்திரிகாவுக்கு மக்கள் வடா பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சந்திரிகா தீக்சித் ஊடக நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: கடின உழைப்பின் காரணமாக நாளொன்றுக்கு ரூ.40,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். நீங்களும் இதேபோன்று சம்பாதிக்கலாம். ஆனால், அதற்கு ஸ்மார்ட்போன், நெட்பிளிக்ஸ் போன்றவற்றை தியாகம் செய்ய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் சாதாரணமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன்.

ஆனால், கிடைத்த வாய்ப்பை திறம்பட செய்ய கடினமாக உழைத்தேன். இதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

இவ்வாறு சந்திரிகா தீக்சித் கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x