ராதாமோகன் - யோகிபாபுவின் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் முதல் தோற்றம் வெளியீடு


ராதாமோகன் - யோகிபாபுவின் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘சட்னி சாம்பார்’ இணையத் தொடரின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், கடந்த ஆண்டு வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற வெப் சீரிஸை ராதாமோகன் இயக்கியுள்ளார். நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். இது யோகிபாபுவின் முதல் வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தத் தொடரில், நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் இட்லி கடை நடத்துபவராக யோகிபாபு நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் நடுவே அப்பாவியான முகத்துடன் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிப் புன்னகையுடன் மற்ற நடிகர்கள் அமர்ந்துள்ளனர். விரைவில் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x